Published : 20 Jul 2021 03:13 AM
Last Updated : 20 Jul 2021 03:13 AM

முதல்வர் அம்ரீந்தர் சிங் எதிர்ப்பையும் மீறி - பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம் :

பஞ்சாபில் முதல்வர் அம்ரீந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநில சட்டப்பேர வைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர்அம்ரீந்தர் சிங்கிற்கும் நவ்ஜோத்சிங் சித்துவிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அம்ரீந்தர் சிங்கையும் ஆட்சியையும் சித்து வெளிப்படையாக விமர்சித்து வந்தார்.

மோதலுக்கு முடிவுகட்ட சமரச முயற்சியாக சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராகவும் தேர்தலில் அம்ரீந்தர் சிங்கை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் கட்சித் தலைமை முடிவு செய்தது. சித்துவை தலைவராக்க அம்ரீந்தர் சிங் எதிர்ப்பு தெரிவித்தார். சித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரினார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை கட்சியின் இடைக்காலத் தலைவர்சோனியாக காந்தி நியமித்துள்ளார். இதை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் நடக்க உள்ளநிலையில், தலித் உள்ளிட்ட சமுதாயத்தினருக்கு கட்சியில் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் சங்கத் சிங் கில்சியான், சுக்வீந்தர் சிங் டேனி, பவன் கோயல், குல்ஜித் சிங் நக்ரா ஆகியோர் மாநில காங்கிரஸ் செயல்தலைவர்களாக நியமிக்கப்பட் டுள்ளனர்.

முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை தனக்கு அளித்ததற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு ட்விட்டர்பதிவில் சித்து நன்றி தெரிவித்துள்ளார். பஞ்சாபில் கட்சியினருடன் இணைந்து காங்கிரசை பலப்படுத்தப் போவதாகவும் தனது பயணம் இப்போதுதான் தொடங்கியிருப்பதாகவும் சித்துதெரிவித்துள்ளார். தனது எதிர்ப்பையும் மீறி மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டதில் முதல்வர் அம்ரீந்தர்சிங் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x