Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளை களை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப் பார்கள். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள்.மிதுனம்: சாதுர்யமாகச் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும்.கடகம்: சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழி பிறக்கும்.சிம்மம்: வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.கன்னி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் அகலும். கலைப்பொருட்கள் சேரும். துலாம்: ஒருவித படபடப்பு வந்து செல்லும். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை ஏற்படக் கூடும். தாழ்வுமனப்பான்மை மீண்டும் தலைதூக்கும். வெளியூர் பயணம் உண்டு.விருச்சிகம்: குடும்பத்தில் வீண் விவாதங்கள் ஏற்படக் கூடும். யாரையும் அநாவசியமாக பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர் வகையில் எதிர்பாராத மனத்தாங்கல் வரும்.தனுசு: குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல்நிலை சீராக அமையும்.மகரம்: இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிப்பு உயரும். புத்தி சாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். ஆன்மிக பயணம் ஏற்படும்.கும்பம்: செலவுகளை தவிர்த்து சேமிக்கும் எண்ணம் வரும். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.மீனம்: எந்தக் காரியத்தைத் தொட்டாலும் பல முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x