Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM

ஜாதிச்சான்று வழங்குவதற்கான ஆய்வு கூட்டம் :

திருப்பத்தூர்: புதூர்நாட்டில் உள்ள மலைவாழ் மக்களுக்கு பழங்குடியின ஜாதிச்சான்று வழங்குவதற்கான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’ திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதூர் நாடு மலை கிராமத்தில் பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு பழங்குடியினர் ஜாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது இன்று (13-ம் தேதி) புதூர் நாடு மலை கிராமத்தில் உள்ள சின்னவட்டனூர் சமுதாய கூடத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை தலைமையில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது உண்மை தன்மைக்கான விசாரணை நடைபெறுகிறது.

எனவே, புதூர்நாடு மலை கிராமத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியினர் ஜாதிச்சான்று வேண்டி விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். அதேபோல, இக்கூட்டத்தில் புதிதாக ஜாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பவர்களும் கலந்து கொண்டு விண்ணப்பங்களை வழங்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x