Published : 12 Jul 2021 03:14 AM
Last Updated : 12 Jul 2021 03:14 AM

புதுவை அரசு ஐடிஐக்களில் சேர்க்கை தொடக்கம் :

புதுச்சேரி அரசு ஐடிஐக்களில் சேர ஆன்லைன் மூலம் விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து மேட்டுப்பாளையம் அரசு ஐடிஐ முதல்வர் அழகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக தொழிலாளர் துறை செயலர் வெளியிட்டுள்ள சேர்க்கை அறிவிப்பின்படி புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு மத்திய அரசு சான்றிதழ், மாநில அரசு சான்றிதழ் பெற்ற பயிற்சி பிரிவுகளில் சேர்ந்து படிக்க 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேறிய மாணவ, மாணவிகளிடம் இருந்து ஆகஸ்ட் 2021-ம் ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேட்டுப்பாளையம் அரசு ஐடிஐயில் எலக்ட்ரீஷியன், பிட்டர், மோட்டார் மெக்கானிக், ஏசி டெக்னிசியன், ஓயர்மேன் மற்றும் எலக்ட்ரானிக் மெக்கானிக் போன்ற இரண்டாண்டு படிப்புகளுக்கும், கம்ப்யூட்டர் இயக்குபவர், வெல்டர், கட்டிடம் கட்டுபவர் மற்றும் பிளாஸ்டிக் செயல்முறை இயக்குபவர் போன்ற ஓராண்டு படிப்புகளுக்கும் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

இதே போல் வில்லியனூரில் இயங்கும் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் கட்டிட பட வரைவாளர், கேட்டரிங் மற்றும் விருந்தோம்பல் தொழிற் பிரிவுகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கு 1.08.2021-ன் படி மாணவர்கள் 14 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த தொழிற் பயிற்சி பிரிவுகளில் சேருவதற்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

அரசு தொழிற்கூட பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.centispuducherry.in/ அல்லது https://labour.py.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் அருகில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு சென்று கட்டணம் ஏதும் இன்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம். பயிற்சி கையேடுகளை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 8619077153, 9489593265 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு தொழிற்கூட பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.centispuducherry.in/ அல்லது https://labour.py.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x