Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் : நிகர லாபம் 32 சதவீதம் உயர்வு :

இதுகுறித்து ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிதிநிலை அறிக்கையின்படி கடந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.340.3 கோடியாக உள்ளது. நிகர வட்டி வருவாய் ரூ.144.2 கோடியாக உள்ளது. நிகர லாபம் 32 சதவீதம் உயர்ந்து ரூ.63.2 கோடியாக இருக்கிறது.

அதேபோல இந்த காலகட்டத்தில் ரூ.645.9 கோடி அளவுக்கு கடன் அனுமதி அளிக்கப்பட்டு; ரூ.640.4 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் வருவாய் 3 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ.1,392.2 கோடியாக உள்ளது. நிகர வட்டி வருவாய் ரூ.566.2 கோடியாக இருக்கிறது. நிகர லாபமும் 3 சதவீதம் உயர்ந்து ரூ.287.6 கோடியாக உள்ளது. கடன் அனுமதி ரூ.1,985.1 கோடியாகவும்; கடன் வழங்கல் ரூ.1,840.9 கோடியாகவும் உள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x