Published : 28 Jun 2021 03:11 AM
Last Updated : 28 Jun 2021 03:11 AM

வில்வித்தையில் : இந்தியாவுக்கு : 3 தங்கப் பதக்கம் :

பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை வில்வித்தை தொடரில் மகளிருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பாரி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிச் சுற்றில் மெக்சிகோவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

ஆடவருக்கான தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா தங்கப் பதக்கம் வென்றார். கலப்பு அணிகள் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் அட்டானு தாஸ், தீபிகா குமாரி ஜோடியும் தங்கப் பதக்கம் வென்றது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x