Published : 21 Jun 2021 03:13 AM
Last Updated : 21 Jun 2021 03:13 AM

தடை தொடர்கிறது :

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி இல்லை. வகை 1, வகை 2 என பிரிக்கப்பட்டுள்ள 34 மாவட்டங்களில் அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் திரையரங்குகளை திறக்க அனுமதி இல்லை. வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்கான தடை தொடர்கிறது.

துணிக்கடைகள், நகைக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும்நிலையில், அந்தக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவின்றி அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், மற்ற மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்க கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x