Published : 19 Jun 2021 03:13 AM
Last Updated : 19 Jun 2021 03:13 AM

ஜூன் 21-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் :

சென்னை

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 21-ம் தேதி நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், “திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் வரும் 21-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது. இக்கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து பட்ஜெட், துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களும் நடைபெறவுள்ளன.

ஆளுங்கட்சியாக சட்டப்பேரவையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் அமைச்சர்களும், மூத்த உறுப்பினர்களும் ஆலோசனை வழங்க இருப்பதாக திமுகவினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x