Published : 18 Jun 2021 03:13 AM
Last Updated : 18 Jun 2021 03:13 AM

கரோனாவால் பாதிக்கப்பட்டதால் - குழந்தையை தனிமைப்படுத்திய தாய்க்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு :

புதுடெல்லி

உத்தரபிரதேச மாநிலம், காஜியாபாத்தில் 3 அறை கொண்ட குடியிருப்பில் பூஜா வர்மா, கணவர் ககன் கவுஷிக் ஆகியோர் தங்களது 6 வயது மகனுடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், பூஜா, கவுஷிக் ஆகியோருக்கு கடந்த ஏப்ரல் மாதம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தங்கள் மகனுக்கு கரோனா பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, இருவரும் தனித்தனி அறையில் தனிமைப்படுத்திக் கொண்டனர். மகனையும் தனி அறையில் தனிமைப்படுத்தினர்.

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு, தன்னுடைய அனுபவம் குறித்து ஒரு பாடல் மூலம் பிரதமர் மோடிக்கு பூஜாஒரு கடிதம் எழுதினார். கரோனாவைப் பற்றியோ அது தொடர்பான விதிமுறைகள் பற்றியோ என்னவென்றே தெரியாத குழந்தையைப் பிரிந்து இருந்த தருணங்களை நினைவுகூரும் வகையில் அந்தப் பாடல் இருந்தது.

இந்தக் கடிதத்துக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். அதில்,“கடினமான சூழலிலும் நீங்கள் கரோனா விதிமுறைகளை துணிவுடன் கடைப்பிடித்து தொற்றை எதிர்த்து போரிட்டுள்ளீர்கள். துன்பம் நேரும்போது அமைதியை இழக்காமல் துணிவுடன் இருக்க வேண்டும் என்பதை சாஸ்திரங்கள் நமக்கு கற்பிக்கின்றன.

குழந்தையைப் பிரிந்து இருக்கும் ஒரு தாயின் கவலையை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் உள்ளது. இனி வாழ்வில் வரும் எத்தகைய சவாலையும் உங்களால் சமாளிக்க முடியும்” என கூறியுள்ளார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x