Published : 18 Jun 2021 03:13 AM
Last Updated : 18 Jun 2021 03:13 AM

நாட்டில் புதிதாக 67,208 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று :

புதுடெல்லி

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,208 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 97 லட்சத்து 313 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 10-வது நாளாக புதிய நோயாளிகள் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு குறைவாக உள்ளது.

கரோனா தொற்றுக்கு தினசரி உயிரிழப்பு குறைந்து வருகிறது. என்றாலும் தொடர்ந்து 4-வது நாளாக இது 2 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,330 பேர் உயிரிழந்தனர். இதனால் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 81,903 ஆக உயர்ந்துள்ளது.

புதிய நோயாளிகளை விடகுணம் அடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து 35-வது நாளாக அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 3,570 நோயாளிகள் குணம் அடைந்தனர். நாட்டில் தற்போதுசிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்து 26,740 ஆக குறைந்துள்ளது. இது கடந்த 71 நாட்களில் மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும்.

பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படுவோர் வாராந்திர விகிதம் தொடந்து 5 சதவீதத்திற்கு குறைவாக உள்ளது. இது தற்போது 3.99 சதவீதமாக உள்ளது. இதில் தினசரி விகிதம் 3.48 சதவீதமாக உள்ளது. இதில் தொடர்ந்து 10-வது நாளாக 5 சதவீதத்திற்கு குறைவாக உள்ளது.

இதுவரை 38.52 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதிலும் 26.55 கோடி தடுப்பூசி டோஸ்கள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x