Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM

இ-சேவை மையம் மூலம் ஜமாபந்தி மனுக்கள் :

பரமக்குடி

இ-சேவை மையம் மூலம் ஜமாபந்தி மனுக்கள் பதிவு செய்து தீர்வு காணலாம் என பரமக்குடி வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

பரமக்குடி வட்டத்தில் 99 வருவாய் கிராமங்களுக்கு 1430-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயக் கணக்குகள் (ஜமாபந்தி) வரும் 26-ம் தேதி முதல் 29 வரை பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தினமும் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் ராமநாதபுரம் ஆட்சியர் சந்திரகலா உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டு தணிக்கை செய்ய உள்ளனர். கரோனா காலமாக இருப்பதால் இ-சேவை மையம் மூலம் மனுதாரரிடம் இருந்து மனுக்கள் பெறப்படும். ஆகவே சம்பந்தப்பட்ட கிராம மக்கள் தங்களது குறைகளை இ-சேவை மையம் மூலம் மனுச் செய்து ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் தீர்வு காணலாம் என பரமக்குடி வட்டாட்சியர் தமீம் ராஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x