Published : 17 Jun 2021 03:12 AM
Last Updated : 17 Jun 2021 03:12 AM

மாதந்தோறும் 3 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறப்பு : சாகுபடி செய்ய முடியாமல் தவிப்பதாக விவசாயிகள் புகார்

உடுமலை

கடந்த 12 ஆண்டுகளாக மாதத்துக்கு3 நாட்கள் மட்டுமே பிஏபி பாசனத்தில் தண்ணீர் திறக்கப்படுவதால், எந்த பயிரையும் சாகுபடி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, கடைமடை விவசாயிகள், முதல்வருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

உடுமலை அடுத்த திருமூர்த்திஅணை மூலம் பிஏபி பாசன திட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் பயன்பெறுவதாக கூறப்படுகிறது. வெள்ளகோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள், இத்திட்டத்தின் கடைமடை விவசாயிகளாக உள்ளனர்.இவர்களுக்கு, பல ஆண்டுகளாகவேஉரிய தண்ணீர் வழங்கப்படுவதில்லை. இத்திட்டத்தில் பயன்பெறாத ஆயக்கட்டுதாரர்கள் நடத்தும் தண்ணீர் திருட்டும், முறையான பாசன விநியோகம் இல்லாததும்தான் இதற்கு காரணம் என்கின்றனர் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.

இதுகுறித்து வெள்ளகோயில் விவசாயிகள் பலர், தமிழக முதல்வர், தலைமைச் செயலர், அமைச்சர்கள், ஆட்சியருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது: வெள்ளகோயில் பகுதியில் 48,000ஏக்கர் விவசாய நிலத்தில், பிஏபி நீரை நம்பியே சாகுபடி செய்யப்படுகிறது. 7 நாள் திறப்பு, 7 நாள் அடைப்பு என்ற ரீதியில் 135 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட வேண்டும்.கடந்த 12 ஆண்டுகளாக மாதத்துக்கு 3 நாட்கள் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. இதேரீதியில் 4 மண்டலங்களுக்கும் தண்ணீர் வழங்கும்பட்சத்தில், புன்செய் பயிர் சாகுபடி செய்யப்படுவது கேள்விக்குறியாகிறது.

அணையில் இருந்து ஒவ்வோர்ஆண்டும் 3 டிஎம்சி தண்ணீர் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்குஎடுக்கப்பட வேண்டிய 1,150 கன அடி தண்ணீர் இதுவரை எடுக்கப்படாமல் உள்ளது. பிஏபி திட்டத்தில்கடைமடை விவசாயிகள் தொடர்ந்துபுறக்கணிக்கப்படுகிறோம், இதைஆதாரங்களுடன் சமர்ப்பிக்கதயாராக உள்ளோம். தொடர்ந்துஇதே நிலை நீடித்தால் 4-ம் மண்டலபாசனத்துக்குட்பட்ட விவசாயிகளான நாங்கள், வாய்க்காலில்இறங்கி போராடவும் முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x