Published : 16 Jun 2021 03:13 AM
Last Updated : 16 Jun 2021 03:13 AM

திருப்புவனம் அருகே முன்விரோதம் - பெண் கவுன்சிலர் உட்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு :

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே நேற்று முன்தினம் இரவு உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதத்தில் ஊராட்சி வார்டு பெண் உறுப்பினர் உட்பட 5 பேரை எதிர் தரப்பினர் அரிவாளால் வெட்டினர். இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்புவனம் ஒன்றியம், மடப்புரம் ஊராட்சி வடகரை 2-வது வார்டு உறுப்பினராக இருப்பவர் முத்திருளாயி. இவருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் ஒன்றாவது வார்டில் போட்டியிட்டு தோல்வியடைந்த பாண்டியம்மா ளுக்கும் இடையே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் பாண்டியம்மாள், அவரது மகன் ரவி மற்றும் உறவி னர்கள் சேர்ந்து வீட்டில் இருந்த முத்திருளாயி, அவரது கணவர் ராமலிங்கம், மகன் பரந்தாமன், உறவினர்கள் ராஜலிங்கம், பரமேஸ்வரன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இதில் காயமடைந்த அவர்கள் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் முதலு தவிக்குப் பிறகு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாண்டியம்மாள், கணவர் நாகராஜன், மகன் ரவி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x