Published : 16 Jun 2021 03:14 AM
Last Updated : 16 Jun 2021 03:14 AM

விவசாய இடுபொருள் கடைகள் இயங்கலாம் :

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு 1.5 லட்சம் ஏக்கரில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்ய திட்டமிட்டு, கடந்த 12-ம் தேதி பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை வழங்க ஏதுவாக விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் விற்பனை நிலையங்கள் நாள்தோறும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் நேற்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x