Published : 12 Jun 2021 07:02 AM
Last Updated : 12 Jun 2021 07:02 AM

பாரம்பரிய நெல் ரக சாகுபடி பயிற்சி :

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார வேளாண்மைத் துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் அங்கக முறையில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி குறித்த பயிற்சி வகுப்பு இணையம் மூலம் நடத்தப்பட்டது.

மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் தலைமையில் நடத்தப்பட்ட இப்பயிற்சியில் வாடிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராமசாமி அட்மா திட்ட வேளாண்மை அலுவலர் முத்துலெட்சுமி, துணை வேளா ண்மை அலுவலர் மனோகரன், வாடிப்பட்டி வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு தலைவர் செல்லப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்தும், அவற்றை அங்கக முறையில் சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் குறித்தும் சமிதி குடுமியான்மலை வேளாண்மை உதவி இயக்குநர் சுபத்ரா விளக்கம் அளித்தார்.

பாரம்பரிய நெல் ரக சாகுபடி குறித்து கருப்பாயூரணியைச் சேர்ந்த விவசாயி புவனேஸ்வரி, தவசிப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த இளம் பட்டதாரி விவசாயி செல்வன் அன்பரசன் ஆகியோர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x