Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

கரோனா தொற்று அதிகரிப்பால் - கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் :

கூடலூர்

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதால், தளர்வுகளற்ற பொதுமுடக்கத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, இந்த இரு தாலுகாக்களிலும் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துவருகிறது.

இதுவரை, மாவட்டத்தில் 23,859 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 4204 பேர் சிகிச்சையில் உள்ளனர்.597 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், கூடலூர்,பந்தலூர் ஆகிய இரண்டு தாலுகாக்களில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள்அச்சமடைந்துள்ளனர். அரசுஅறிவித்த தளர்வுகளை முழுமையாக செயல்படுத்தாமல், அப்பகுதி வணிகர்கள் மதியம் 1 மணி வரை கடைகள் திறந்தனர். இந்நிலையில்,கூடலூர், பந்தலூர் பகுதிகள், மசினகுடி பகுதியில் பெருகிவரும்கரோனா தொற்றை கட்டுக்குள்கொண்டுவர, கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில், வணிகர்கள்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில், அனைத்துக் கடைகளையும் ஜூன் 14-ம் தேதி வரை அடைக்க உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் அனைத்து கடைகள்,வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. மருந்துக் கடைகள், பாலகங்கள் மட்டுமே செயல்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x