Published : 05 Jun 2021 03:11 AM
Last Updated : 05 Jun 2021 03:11 AM

ஊரடங்கால் மூடப்பட்டுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் - கரோனா பாதிப்பால் பெண் சிங்கம் உயிரிழப்பு : வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 8 சிங்கங்களுக்கு தீவிர சிகிச்சை

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனா தொற்றால் பெண் சிங்கம் உயிரிழந்தது. தொற்றால் பாதிக் கப்பட்டுள்ள மேலும் 8 சிங்கங்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இதையடுத்து, பூங்காவில் நோய்த் தடுப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, நாட்டில் அறிவியல்பூர்வமாக பராமரிக்கப்பட்டு வரும் உயிரியல் பூங்காக்களில் முக்கியமான ஒன் றாகும். 1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில், 228 ஏக்கர் பரப்பளவு கொண்ட விலங்குகள் மீட்பு மற்றும் மறு வாழ்வு சிகிச்சை மையமும் இடம் பெற்றுள்ளது. நாட்டிலேயே பெரிய விலங்கியல் பூங்காவாக இது திகழ்கிறது. இங்கு ஊர்வன, பறப்பன, பாலூட்டி என 172 இனங்களைச் சேர்ந்த மொத்தம் 2 ஆயிரத்து 704 விலங்குகள், இயற்கைச் சூழலில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக இந்த உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மனிதர்களுக்கு கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், ஹைதரா பாத், ஜெய்ப்பூர், உத்தரபிரதேசத்தின் இட்டாவா ஆகிய இடங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களில் சிங்கங்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப் பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கரோனா பரவல் தடுப்பு வழிமுறை களை கடைபிடிக்கவும் உயிரியல் பூங்காக்களுக்கு தேசிய உயிரியல் பூங்கா ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

இதனிடையே, வண்டலூர் உயி ரியல் பூங்காவில் உள்ள சிங்கங் களுக்கும் கரோனா தொற்று ஏற்பட் டுள்ளது தற்போது உறுதி செய்யப் பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது. இப்பூங்காவில் 7 ஆண் சிங்கங்கள், 8 பெண் சிங்கங்கள் என மொத்தம் 15 சிங்கங்கள் இருந்தன. இவற்றில் உலாவிடப் பகுதியில் இருந்த 7 சிங்கங்களுக்கும், அடைக்கப்பட்ட இடத்தில் இருந்த 2 சிங்கங்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக வண்டலூர் உயி ரியல் பூங்கா நிர்வாகம் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

வண்டலூர் பூங்காவில் கடந்த மே 26-ம் தேதி, உலாவிட இருப்பிடத்தில் இருந்த 5 சிங்கங்கள் சரியாக உணவு உண்ணவில்லை எனவும், அவற்றுக்கு தொடர் இருமல் இருப்பதாகவும் தகவல் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து பூங்காவின் வனவிலங்கு மருத்துவர்கள் உடனடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு, சிங்கங் களுக்கு சிகிச்சை அளித்தனர். பூங்கா நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, சிங்கங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ நிபுணர் கள் அடங்கிய குழுவை தமிழ் நாடு கால்நடை மருத்துவ பல் கலைக்கழகம் அனுப்பி வைத்தது.

மருத்துவ நிபுணர்கள் வந்து, பூங்காவில் உள்ள 11 சிங்கங்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி வைத்தனர். சிங்கங்களின் மூக்கு மற்றும் மல வாயிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப் பட்டு மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு நோய் ஆய்வக நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீலா என்ற பெண் சிங்கம்

பூங்காவின் 2-வது உலாவிட இருப்பிடத்தில் இருந்த 9 வயதான நீலா என்ற பெண் சிங்கத்துக்கு மூக்கில் இருந்து திரவங்கள் சுரந்து கொண்டிருந்தது. அதற்கு உடனடி யாக சிகிச்சை தரப்பட்டது. இருப் பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 3-ம் தேதி மாலை அந்த பெண் சிங்கம் உயிரிழந்தது. இதனிடையே, போபால் ஆய்வகம் அளித்துள்ள அறிக்கையின்படி, 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக் கப்பட்ட சிங்கங்களில் உயிரிழந்த நீலாவும் ஒன்று. மீதமுள்ள 8 சிங்கங்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த ஆய்வக அறிக்கையின் தகவலை உறுதிப்படுத்திக் கொள் வதற்காக, இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், ஹைதரா பாத்தில் உள்ள மூலக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையத் துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய உயிரியல் பூங்காக்கள் ஆணை யம் மற்றும் மத்திய, மாநில அரசு களின் அறிவுறுத்தல்படி வண்ட லூர் உயிரியல் பூங்காவில் முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தொடர் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சிங்கங்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பூங்காவில் உள்ள பூனை, நாய், புனுகுப் பூனை, குரங்கு இனங்களுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், ஹைதராபாத் உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவர்கள் அறிவுரைப்படி நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன. தொற்று உறுதி செய் யப்பட்ட சிங்கங்கள் தீவிரமாக கண் காணிக்கப்பட்டு வருகின்றன. அவற் றுக்குத் தேவையான சிகிச்சைகள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழக குழுவினருடன் இணைந்து அளிக்கப்பட்டு வருகிறது.

பூங்காவில் விலங்கு கூடங்களில் பணிபுரியும் அனைத்து விலங்கு காப்பாளர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ் வொரு சிங்க குழுவுக்கும் தனித் தனி விலங்கு காப்பாளர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு உடைகள், உபகரணங் கள் வழங்கப்பட்டுள்ளன. கால் நடை மருத்துவர்களும், களப்பணி யாளர்களும் அப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதும், பெண் சிங்கம் உயிரிழந்துள்ளதும் விலங்கு கள் ஆர்வலர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x