Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM

கன்னட மொழி அழகற்றதா? : மன்னிப்பு கோரியது கூகுள் நிறுவனம்

கூகுள் தேடல் பகுதியில், “இந்தியாவில் அழகற்ற மொழி எது” என்று பதிவிட்டபோது அதற்கு ‘கன்னடம்' என்று திரையில் தோன்றியது. இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம்கன்னட மொழியில் வெளியிட்டுள்ள பதிவில், “கர்நாடக மாநிலமக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக வருந்துகிறோம். மன்னிப்பு கோருகிறோம். தவறு உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது" என்று கூறியுள்ளது.

மேலும் ‘அல்காரிதம்' அடிப்படையில் கூகுள் தேடல் பகுதி செயல்படுகிறது. ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தை தேடும் போது, அதுதொடர்பான இணையதளம், கட்டுரைகள், வார்த்தைகள் அலசி ஆராயப்பட்டு தகவல் அளிக்கப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் தவறு நேர்ந்து விடுகிறது. சர்ச்சை விவகாரங்கள் எழுகின்றன.

இவை கூகுளின் பதில்கிடையாது. சில எதிர்மறையாளர்களின் தவறான கருத்துகளால் கூகுள் தேடலில்தவறு ஏற்படுகிறது என்று அந்தநிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கூகுளின் விளக்கத்தை மேற்கோள் காட்டி இதற்கு முன்பு நடந்த சில தவறுகளை தொழில்நுட்ப நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x