Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM

மேஷம்: குறிக்கோளை எட்டிப் பிடிக்க முயற்சிப்பீர்கள்

மேஷம்: குறிக்கோளை எட்டிப் பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் மனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்விர்கள்.ரிஷபம்: அதிரடியாகத் திட்டங்கள் தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூரில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.மிதுனம்: பிரபலங்களின் சந்திப்பு நிகழும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். தாய்வழி உறவினர்களிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும்.கடகம்: குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.சிம்மம்: சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.கன்னி: பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இழுபறியாக இருந்துவந்த வழக்கு நல்ல விதத்தில் முடியும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.துலாம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்டநாள் ஆசைகள் பூர்த்தியாகும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலை சீராகும்.விருச்சிகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும்.தனுசு: எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். பேச்சு திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.மகரம்: குடும்பத்தினரிடையே ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி அமைதி திரும்பும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.கும்பம்: தடைபட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றுக்கு உங்களின் அவசர முடிவுதான் காரணம் என்பதை உணர்வீர்கள். வாகனம் செலவு வைக்கும்.மீனம்: எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x