Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

மாணவர்கள் உடல்நலன் விவகாரத்தில் சமரசம் செய்ய முடியாது - சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு ரத்து : பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

கரோனா பரவல் காரணமாக நடப் பாண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மாணவர்களின் உடல்நலனை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய இடைநிலை கல்வி வாரியத் தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர் களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன. அதன்படி, நடப் பாண்டுக்கான பொதுத்தேர்வுகளை மே 4 முதல் ஜூன் 14-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது.

இதனிடையே நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரத்தால் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி கள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு இணையவழியில் பாடங்கள் நடத்தப் பட்டு வருகின்றன. இதையடுத்து சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாகவும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி அறிவித்தார். மேலும், 12-ம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து ஜூன் 1-ம் தேதி ஆய்வு செய்து அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங் களிலும் 12-ம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. கரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் பொதுத்தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து அண்மையில் மாநில அரசுகளுடன் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோ சனை நடத்தியது. இதில் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் கருத்து தெரிவித்தன. மாற்று முறையில் மதிப்பீடு செய்யவும் சில மாநிலங்கள் வலியுறுத்தின.

அசாதாரண சூழல் நிலவுவதால் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வந்தது. மாணவர்கள் உயர்கல்வி பாதிக்கப் படும் என்பதால் பொதுத்தேர்வை ரத்து செய்ய சிபிஎஸ்இ தயக்கம் காட்டியது. 12-ம் வகுப்பு தேர்வை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது தேர்வு நடத்துவது குறித்து 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறை செயலர்கள் கலந்துகொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவின்படி சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதுகுறித்து பிரதமர் பேசியதாவது:

கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டும், பல்வேறு தரப்பினரின் கருத்துகள் அடிப்படையிலும் நடப்பு ஆண்டில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மாணவர்களின் உடல்நலனை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

மொத்த கல்வி ஆண்டும் பாதிப்பு

கரோனா பெருந்தொற்று ஒட்டு மொத்த கல்வி ஆண்டை பாதித்துள் ளது. பொதுத்தேர்வு பிரச்சினை மாண வர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசி ரியர்கள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது அவசியம். மாணவர்களின் உடல் ஆரோக்கியம், பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்த விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்ய இயலாது. மனச்சோர்வு மிகுந்த ஒரு சூழலில் பொதுத்தேர்வை எழுதுமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அனைத்து தரப்பினரும் மாண வர்களின் நிலையை புரிந்துகொள்ள வேண்டும். மாணவர்களுக்கு மதிப் பெண்கள் வழங்குவதற்கான உரிய வழிமுறைகள் விரைவில் வெளி யிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கரோனா பரவலால் தள்ளிவைக் கப்பட்ட ஐஎஸ்சி (12-ம் வகுப்பு ) பாடத் திட்ட பொதுத்தேர்வுகளும் தற்போது ரத்து செய்யப்படுவதாகவும், மதிப் பெண் கணக்கீட்டு வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் இந்திய பள்ளிகள் சான்றிதழ் தேர்வுக் குழுமத்தின் (சிஐஎஸ்சிஇ) செயலாளர் ஜெர்ரி அர்தூண் அறிவித் துள்ளார்.

தமிழகம் இன்று ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அதிகாரிகளுடன் முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். சிபிஎஸ்இ முடிவு வெளியானதும் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தற்போது சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் முடிவு குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். பின்னர் முதல்வருடன் மீண்டும் ஆலோசித்து, பிளஸ் 2 தேர்வு குறித்த அறிவிப்பை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x