Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி கோட்டங்களில் - மின் பயன்பாட்டை சுய கணக்கீடு செய்து அனுப்ப ‘வாட்ஸ்அப்’ எண்கள் அறிவிப்பு :

பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி மின் கோட்டங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர், தங்கள் மின் பயன்பாட்டை சுய கணக்கீடு செய்து அனுப்ப, வாட்ஸ்அப் எண்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், மின்வாரிய பணியாளர்கள் வீடு வீடாக சென்று மின் பயன்பாட்டை கணக்கீடு செய்ய இயலாத நிலை உள்ளது. இதனால், கடந்த 2019 மே மாத மின் பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க மின்வாரியம் முடிவெடுத்துள்ளது. இதில் விருப்பம் இல்லாதவர்கள், தங்கள் வீட்டின் மின் மீட்டரின் அளவீட்டை தெளிவாக புகைப்படம் எடுத்து, தங்கள் பகுதிக்கான வாட்ஸ்அப் எண்ணில் மின்வாரியத்துக்கு அனுப்பலாம். அதன் அடிப்படையில் கட்டணம் கணக்கிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்காக, பகுதி வாரியாக வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ‘‘பொள்ளாச்சி நகரம் - 9787771727, மகாலிங்கபுரம் - 70108 67660, பொள்ளாச்சிகிராமங்கள் - 98655 81918, டி.கோட்டாம்பட்டி - 85267 26935, ரங்கசமுத்திரம் - 98421 48543, தாளக்கரை முத்தூர் - 99760 57020, மண்ணூர் - 9698895895, மார்ச்சநாயக்கன்பாளையம் - 94421 94505,ஜமீன் ஊத்தக்குளி - 98652 88959, கோமங்கலம் - 94429 50975, சமத்தூர் - 94437 58311, பெதப்பம்பட்டி - 79048 38264, வீ.வேலூர் - 9976490745, ராமச்சந்திராபுரம் - 79048 38264, கொங்கல்நகரம்-87783 43313, ஏரிப்பட்டி - 98655 81918 ஆகியஎண்களுக்கு அனுப்பலாம்” என பொள்ளாச்சி மின் கோட்ட செயற்பொறியாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

“அய்யர்பாடி-9442359915, 9625902398, வால்பாறை வடக்கு - 94861 10102, 94884 41749,வால்பாறை தெற்கு - 94423 59915, முடீஸ் -94423 59915, 94864 11869, சோலையார் நகர் -94423 59915, 90477 27866, அங்கலக்குறிச்சி -75983 05817, 63800 25823, ஆனைமலை கிராமங்கள் - 94893 77594, 97159 92911, ஆனைமலை நகரம் - 94893 77594, 63802 11779 ஆகிய எண்களுக்கு அனுப்பலாம்” என அங்கலக்குறிச்சி மின் கோட்ட செயற்பொறியாளர் ராம்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x