Published : 28 May 2021 06:40 AM
Last Updated : 28 May 2021 06:40 AM

கரோனா தடுப்பு பணியில் தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்க - பிரத்யேக இணையதளம், முகநூல் பக்கம் தொடக்கம் : தொலைபேசி எண்ணையும் வெளியிட்டது தமிழக அரசு

சென்னை

கரோனா பரவலைத் தடுக்கும் பணியில் அரசுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்காக பிரத்யேக இணையதளம், முகநூல் பக்கம் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா தொற்றின் 2-ம் அலைபரவலைத் தடுக்க அரசுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்த கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கடந்த 19-ம் தேதி நடந்தது.

அதைத் தொடர்ந்து, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட, மாநில, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.

தன்னலம் கருதாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள், பெருந்தொழில் நிறுவனங்கள் https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து, மக்களுக்கு உதவும் பெரும்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

மேலும், https://www.facebook.com/tnngocoordination என்ற முகநூல் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது. 8754491300 என்ற கைபேசி எண் வாயிலாகவும், tnngocoordination@gmail.com என்ற இணையதளம் வாயிலாகவும் மாநில ஒருங்கிணைப்புக் குழுவை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x