Published : 28 May 2021 06:40 AM
Last Updated : 28 May 2021 06:40 AM

கரோனா பரவலை கட்டுப்படுத்த - ஓரிரு வாரங்களுக்கு முனைப்புடன் செயல்பட வேண்டும் : 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

கரோனா பரவலை கட்டுப்படுத்த அடுத்த ஓரிரு வாரங்களுக்கு அனைத்து முயற்சிகளையும் முனைப்புடன் மாவட்ட ஆட்சியர் கள் மேற்கொள்ள வேண்டும் என்று கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல் வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி யுள்ளார்.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொற்று பரவல் சிறிது குறையும் நிலையில், கோவை உள் ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலை யில், கரோனா பரவல் அதிகரித்து வரும் கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களின் ஆட்சி யர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது முதல்வர் பேசிய தாவது:

கடந்த 2 வாரங்களில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத் துள்ளது. இதன் காரணமாக வும், முழு ஊரடங்கு அமல்படுத் தப்பட்டதாலும் மாநில அள விலும், சென்னை மாநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங் களிலும் கரோனா தொற்றின் தாக் கம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.

இருப்பினும் மாவட்ட வாரியாக ஆய்வு செய்யும்போது கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் போதிய அளவு கட்டுப்படுத்தப்படாத சூழலே காணப்படுகிறது. அரசு மற்றும் தனியார் துறையில் நல்ல மருத்துவ கட்டமைப்பை கொண்டுள்ள இந்த 6 மாவட்டங்களில், அதை முழுமை யாக பயன்படுத்தி சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் உடனடியாக போதிய படுக்கை வசதி கள் கிடைப்பதை மாவட்ட ஆட்சி யர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த மாவட்டங்களில் நோய்த் தொற்றை கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள் ளது. இருப்பினும், நோய்ப் பரவல் அதிகம் உள்ள பகுதிகளை கண் காணித்து போதிய பரிசோதனைகள் செய்து, தொற்று உள்ள அனை வரும் தனிமைப்படுத்தப்பட வேண் டும். தடுப்பூசி போடும் பணியை பொறுத்தவரை கோவை, சேலம் மாவட்டங்களில் அதிக அளவில் போடப்பட்டுள்ளன. மற்ற நான்கு மாவட்டங்களிலும் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி உடனடியாக கிடைக்கச் செய்ய வேண்டும்.

இரண்டாம் அலை காலகட்டத் தில் கிராமப் பகுதிகளிலும் நோய்ப் பரவல் அதிக அளவில் காணப்படு கிறது. இதை கருத்தில்கொண்டு நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து பிற பகுதிகளுக்கு பரவா மல் தடுக்க வேண்டும். கரோனா வின் 2-வது அலையை நம் மாநி லம் கட்டுப்படுத்த இந்த 6 மாவட் டங்களில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றி அடை வது அவசியம் என்பதை மனதில் கொண்டு, அடுத்த ஓரிரு வாரங்களுக்கு அனைத்து முயற்சிகளையும் முனைப்புடன் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

ஆலோசனையில் அமைச்சர் கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி ஜே.கே.திரிபாதி, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, தொழில் துறை செயலர் என்.முருகானந்தம், மருத் துவத் துறை செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன், சிறப்பு பணி அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x