Published : 26 May 2021 03:14 AM
Last Updated : 26 May 2021 03:14 AM

மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு சலுகை நீட்டிப்பு :

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப் பதாவது: கரோனா பெருந் தொற்றுக் காலத்தில் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கடந்த 23-ம் தேதி வரை மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவல கத்துக்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்களித்து அரசு ஆணையிட்டுள்ளது.

கடந்த 24-ம் தேதி வரும் 31-ம்தேதிமுழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.இதனடிப்படையில், மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் ஏற்கெனவே கடந்த 23-ம் தேதி வரை அலுவலகத்துக்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்களித்துள்ளதை மேலும் நீட்டிப்பு செய்து, வரும் 30-ம் தேதி வரை மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்துக்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்களித்து அரசு ஆணையிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x