Published : 22 May 2021 03:11 AM
Last Updated : 22 May 2021 03:11 AM

அன்புக்குரியவர்கள், நண்பர்களை இழந்திருக்கிறோம் - கரோனாவால் உயிரிழந்தவர்களுக்காககண் கலங்கிய பிரதமர் நரேந்திர மோடி : அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுகோள்

கரோனாவால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி கண் கலங்கினார், அவரது நா தழுதழுத்தது.

தனது சொந்த தொகுதியான வாரணாசியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர் கள், முன்கள பணியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக கலந் துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

காசியின் சேவகன் என்ற வகை யில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப நிபு ணர்கள், சுகாதார உதவியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அனை வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாரணாசியில் மைக்ரோ கட்டுப் பாட்டு மண்டலம் திட்டத்தின் மூலம் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. மருத்துவர்கள், ஆய்வகங்கள், இ-வணிக நிறுவனங்கள் இணைந்து தொலைத்தொடர்பு மருத்துவ சேவையை வழங்கி வருகின்றனர். இது புதுமையான முயற்சி யாகும்.

முன்னுதாரணம்

பனாரஸில் மிக குறுகிய காலத்தில் ஆக்சிஜன் படுக்கை, ஐசியு படுக்கை வசதிகள் அதிகரிக் கப்பட்டுள்ளன. கரோனா தடுப்புப் பணியில் ஒட்டுமொத்த உலகத்துக் கும் வாரணாசி முன்னுதாரணமாக திகழ்கிறது. இங்கு பின்பற்றப்படும் கரோனா தடுப்பு நடைமுறைகளை நாட்டின் பிற பகுதிகளிலும் அமல்படுத்தலாம்.

பனாரஸ், பூர்வாஞ்சல் பகுதி கரோனா தடுப்புப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கிராமங்களில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத் துவர்கள், சுகாதார ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு டோஸ் கரோனா தடுப்பூசிகூட வீணாகக் கூடாது.

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம், உஜ்வாலா இலவச சமையல் காஸ் இணைப்பு திட்டம், ஜன் தன் வங்கிக் கணக்கு, தூய்மை இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இதன்காரணமாக கரோனா வைரஸுக்கு எதிராக உறுதியாக போரிட முடிகிறது.

ஆஷா, ஏஎன்எம் ஊழியர்கள் கிராமங்கள்தோறும் சென்று கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது அனுபவ மும் உழைப்பும் பெரிதும் உதவிகர மாக உள்ளது. முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் 2-வது அலையின்போது அவர்கள் அச்சமின்றி பணியாற்ற முடிகிறது.

அனைத்து தரப்பு மக்களும் கரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து தங்கள் நேரம் வரும்போது தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதற்காக நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்படும்.

கருப்பு பூஞ்சை நோய் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்த நோய்ப் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை இப்போதே எடுக்க வேண்டும். அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களோடு எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.

கரோனா வைரஸுக்கு எதிராக மிக நீண்ட போரில் பங்கேற் றுள்ளோம். இந்த காலகட்டத்தில் கரோனா நோயாளிகளின் வீடு களுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது சுகாதார கட்டமைப்பு மீதான சுமை குறையும். காசி விஸ்வநாதர் ஆசியுடன் கரோனாவுக்கு எதிரான போரில் காசி வெற்றி பெறும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

கண் கலங்கினார்

பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேசிய போது, ‘‘கரோனா வைரஸால் நமது அன்புக் குரியவர்களை இழந்துள் ளோம். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை இழந்துவாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள் கிறேன்" என்றார்.

கரோனாவால் உயிரிழந்தவர் களை பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்தபோது தன்னை யறியாமல் கண்கலங்கினார். பேச முடியாமல் அவரது நா தழுதழுத்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x