Published : 21 May 2021 03:10 AM
Last Updated : 21 May 2021 03:10 AM

வெள்ளை பூஞ்சை நோய் :

கருப்பு பூஞ்சையைவிட ஆபத்தான வெள்ளை பூஞ்சை நோய் பிஹாரில் கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளை பூஞ்சை நோய் நுரையீரலை பாதிக்கிறது. அதோடு தோல், நகம், வாயின் உட்பகுதி, வயிறு, குடல், சிறுநீரகம், இனப்பெருக்க உறுப்பு, மூளை ஆகியவற்றையும் பாதிக்கிறது.

இதுகுறித்து பாட்னா மருத்துவமனை மைக்ரோபயோலஜி துறை தலைவர் மருத்துவர் எஸ்.என்.சிங் கூறும்போது, "எங்களது மருத்துவமனையில் 4 நோயாளிகள் வெள்ளை பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு கரோனாவுக்கான அறிகுறிகள் உள்ளன. ஆனால் பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் மட்டுமே 4 நோயாளிகளுக்கும் பலன் அளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நீரழிவு நோயாளிகள் வெள்ளை பூஞ்சையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x