Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்துள்ள - கரோனா எதிர்ப்பு மருந்து ‘2டிஜி’அறிமுகம் :

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்துள்ள கரோனா எதிர்ப்பு மருந்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் நேற்று அறிமுகம் செய்தார்.

டிஆர்டிஓ மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபாரேட்டரீஸ் நிறுவனம் இணைந்து, '2-டியாக்சி-டி-குளுக்கோஸ்' என்ற கரோனா எதிர்ப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளன. சுருக்கமாக '2டிஜி' என்றழைக்கப்படும் இந்த மருந்து, குளுக் கோஸை அடிப்படையாகக் கொண்டது.

நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் 3 கட்டங்களாக புதிய மருந்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நோயாளிகளின் உடல்நிலையில் குறிப் பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் இந்திய மருந்து பொது கட்டுப்பாட்டு கண்காணிப்பாளர் (டிசிஜிஐ), புதிய மருந்தை பயன்படுத்த அண்மையில் அனுமதி அளித்தார்.

இதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இணைந்து, '2டிஜி' மருந்தை டெல்லியில் நேற்று அறிமுகம் செய்தனர். அப்போது அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2டிஜி மருந்து, கரோனா நோயாளிகள் விரைவாக குணமடைய உதவும். மேலும் நோயாளிகள் ஆக்சிஜனை சார்ந்திருப்பதற்கான தேவை யும் குறையும். இந்தியாவுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்துக்கும் இந்த மருந்து, அருமருந்தாக அமையும். புதிய மருந்தை கண்டுபிடித்த டிஆர்டிஓவுக்கும் விஞ்ஞானி களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி கூறிய தாவது:

முதல்கட்டமாக 2டிஜி மருந்து, டெல்லி யில் அமைந்துள்ள டிஆர்டிஓ கரோனா மருத் துவமனை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நோயாளிகளுக்கு புதிய மருந்து அளிக்கப் படும்.

வரும் ஜூன் முதல் வாரத்தில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 2டிஜி மருந்து கிடைக்கும். இந்த மருந்தை காலை, மாலை நேரங்களில் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். தொடர்ந்து 5 முதல் 7 நாட்கள் வரை குடித்து வந்தால் நோயாளியின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அவர் விரைவில் குணம் அடைவார். மித மான, தீவிரமான பாதிப்புள்ள கரோனா நோயாளிகளுக்கு 2டிஜி மருந்தினை வழங்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x