Published : 18 May 2021 03:12 am

Updated : 18 May 2021 03:12 am

 

Published : 18 May 2021 03:12 AM
Last Updated : 18 May 2021 03:12 AM

8 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்புசென்னை :

: தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி-ராமேஸ்வரம் (06849/ 06850), கோயம்புத்தூர்- நாகர்கோவில் (02668) சிறப்பு ரயில்கள் வரும் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலும், நாகர்கோவில்-கோயம்புத்தூர் (02667) ரயில் வரும் 20-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரையிலும், சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் (06865) ரயில் 20-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.இதேபோல, தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் (06866) ரயில் வரும் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலும், லோக்மானிய திலக்- கொச்சிவேலி (06163) ரயில் வரும் 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலும், கொச்சிவேலி-லோக்மானிய திலக் (06164) ரயில் வரும் 20-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரையிலும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x