Published : 16 May 2021 03:17 AM
Last Updated : 16 May 2021 03:17 AM

புதிதாக 1,823 பேருக்கு கரோனா தொற்று :

வேலூர்/திருப்பத்தூர்/தி.மலை: வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை மாவட்டங்களில் புதிதாக 1,823 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

வேலூர் மாவட்டத்தில் தினமும் சராசரி கரோனா தொற்று அளவாக 700-ஐ கடந்து வருகிறது. நேற்று காலை வெளியான பட்டியலின்படி மாவட்டத்தில் புதிதாக 753 பேருக்கு தொற்று உறுதியானது. அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 458 பேருக்கு தொற்று உறுதியானது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 612 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30,243-ஆக உயர்ந்துள்ளது. 25,730 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 4,169 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 344-ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x