Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM

காலை 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி கடைகளுக்கு அனுமதி - இன்றுமுதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் : தேநீர் கடைகளுக்கு தடைமாவட்டத்துக்குள் செல்லவும் இ-பதிவு கட்டாயம்

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்றுமுதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மளிகை, காய்கறி கடைகள் காலை 10 மணிவரை மட்டுமே இயங்க வேண்டும். தேநீர் கடைகள் இயங்க அனுமதியில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித் துள்ளார்.

மாவட்டத்துக்குள்ளும், வெளியிலும் செல்ல இ-பதிவு கட்டாயம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸின் 2-ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கடந்த மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊர டங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலானோர் ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றுகின்றனர். இதனால், தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, அடுத்தகட்ட நட வடிக்கை குறித்து சட்டப்பேரவையில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். இதில், ஊர டங்கை தீவிரப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளை நீக்கி, கட்டுப்பாடுகளை தீவிரப் படுத்துவது குறித்து முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி ஜே.கே.திரிபாதி, வருவாய்த் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, உள்துறை செய லர் எஸ்.கே.பிரபாகர், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். ஊர டங்கு தளர்வுகளை குறைப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தவிர்க்க முடியாத காரணங்கள் அடிப் படையில், மே 15-ம் தேதி (இன்று) அதிகாலை 4 மணி முதல் வரும் 24-ம் தேதி அதிகாலை 4 மணிவரை புதிய கட்டுப் பாடுகள் விதிக்கப்படுகின்றன.

l தனியாக செயல்படும் மளிகை, பல சரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் விற் பனைக் கடைகள் குளிர்சாதன வசதி யின்றி பகல் 12 மணிக்கு பதில், காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும்.

l மின் வணிக நிறுவனம் மூலம் மளிகை, காய்கறிகள் இதே நேரத்தில் மட்டும் விநியோகிக்க அனுமதிக்கப்படும். இந்த கடைகள் தவிர வேறு கடைகள் அனைத் தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

l ஏடிஎம் மையங்கள், பெட்ரோல், டீசல் பங்க்குகள், ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் செயல்படலாம்.

l பொதுமக்கள் தங்கள் வீட்டின் அருகி லேயே தங்களுக்குத் தேவையான மளிகை, பலசரக்கு, காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம்.

l காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.

l தேநீர் கடைகள் இயங்க அனுமதி இல்லை

l மின் வணிக நிறுவனங்கள் பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

இ-பதிவு முறை

l வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடு களில் இருந்து தமிழகத்துக்கு வரு வோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.

l அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினர்களின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக் கான தேவை போன்றவற்றுக்கு மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பயணிக்க இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும். வரும் 17-ம் தேதி காலை 6 மணி முதல் இ-பதிவு முறை நடைமுறைக்கு வரும். இ-பதிவை ‘’ என்ற இணையதள முகவரியில் மேற்கொள்ளலாம்.

l மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏற்கெனவே அறிவித்தபடி இரவு 10 முதல் காலை 4 மணிவரை இரவு ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப் படும்.

l அதேபோல் மே 16, 23 ஆகிய ஞாயிற் றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

l மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால், இந்த கடைகளை பல்வேறு இடங்களுக்கு பரவலாக மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரடங்கு விதிமுறைகளை பொது மக்கள் முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும். அரசின் முயற்சிகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x