Published : 11 May 2021 03:12 AM
Last Updated : 11 May 2021 03:12 AM

ராஜபாளையம்-தென்காசி இடையே - சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்படும் மரங்கள் : வேரோடு இடமாற்றம் செய்யப்படுமா?

ராஜபாளையம் தென்காசி சாலையில் விரிவாக்கப் பணிக்காக வெட்டப்படும் மரங்கள்.

ராஜபாளையம்

சாலை விரிவாக்கப் பணிக்காக ராஜபாளையம்-தென்காசி சாலை யில் அரசு மருத்துவமனை அருகே ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு மரமும் 50 முதல் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை ஆகும். அதிலும் குறிப்பாக 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தை வெட்டி அகற்றிவிட்டு சாலை அமைக் கும் பணி நடைபெறுகிறது.

அதிகரித்துவரும் கரோனா தொற்றால் நோய் பாதிப்புக் குள்ளான மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் நிலையில், இயற்கையாக மனி தன் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனை வழங்கும் மரங்களை வெட்டி அழித்துவிடாமல், அவற்றை நவீன இயந்திரங்கள் மூலம் வேரோடு எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x