Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM

கோவை அரசு மருத்துவமனைக்கு ரூ.7.50 லட்சம் மதிப்பில் - முழு கவச உடை, முகக்கவசங்களை வழங்கிய தன்னார்வலர்கள் :

கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றுவோருக்குத் தேவையான முழு கவச உடை, முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றை ரூ.7.50 லட்சம் மதிப்பில் தன்னார்வலர்கள் வழங்கியுள்ளனர்.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் பயன்படுத்தும் மருத்துவப் பொருட்கள் தேவைப்படுகின்றன. அரசு சார்பில் இவை அளிக்கப்பட்டு வந்தாலும், தன்னார்வலர்கள் பலரும் அரசு மருத்துவமனைக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில், கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் வெங்கடேசமோகன் முயற்சியால் அவரது நண்பர்கள் மூலம் மூச்சு விட போராடும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்த உதவும் முகக் கவசங்கள், ஆக்சிஜன் விரயம் இல்லாமல் தேவைக்கேற்ப செலுத்த உதவும் முகக்கவசங்கள், என்95 முகக் கவசங்கள், முன் களப் பணியாளர்களுக்கு முழு கவச உடை (பிபிஇ கிட்), கிருமிநாசினி போன்றவை வாங்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று வழங்கப்பட்டன. ரூ.7.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவியவர்களுக்கு கரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவக் குழு சார்பாக கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x