Published : 08 May 2021 03:13 AM
Last Updated : 08 May 2021 03:13 AM
சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தமிழக முதல்வராக நேற்று காலை மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். முதல்வரான பின்னர், தனது அதிகாரப்பூர்வ முகநூல், ட்விட்டர் பக்கங்களை மாற்றி அமைத்துள்ளார். முகநூல், ட்விட்டரில் தன்னைப் பற்றி குறிப்பிடும்போது, ‘தமிழக முதல்வர், திமுக தலைவர்’ என்பதோடு, ‘திராவிட இனத்தைச் சேர்ந்தவன்’ என்றும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுல்லாது தனது முகநூல், ட்விட்டர் முகப்பு பக்கத்தில், ‘இனி தமிழகம் வெல்லும்' என்ற வாசகம் அடங்கிய படத்தை வைத்துள்ளார். அதேபோல், முதல்வராகப் பதவியேற்றதும் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “முத்துவேல் கருணாநிதிஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி இன்று தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் - திருவாரூரைச் சார்ந்த எனக்கு, தாய்த் தமிழகத்துக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT