Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்பு - 34 அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு : புதுமுகங்கள் 15 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்கிறார். அவருடன் துரை முருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு உள் ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற் கின்றனர். இவர்களுக்கு ஆளுநர் பன் வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். 34 பேர் கொண்ட அமைச்சரவையில் 15 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர் தலில் திமுக கூட்டணி 159 இடங்களைப் பிடித்து அமோக வெற்றி பெற்றது. திமுக மட்டும் 125 தொகுதிகளில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக் கிறது. கடந்த 4-ம் தேதி நடந்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டப் பேரவை தலைவராக மு.க.ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதை யடுத்து, நேற்று முன்தினம் ஆளுநர் பன் வாரிலால் புரோஹித்தை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அன்று மாலையே ஆட்சி அமைக்க வருமாறு ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

அதன்படி, புதிய அமைச்சரவை பதவி யேற்பு விழா இன்று காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் எளிமையாக நடக் கிறது. இதில், தமிழகத்தின் 23-வது முதல் வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து புதிய அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர்.

இதனிடையே, திமுக சார்பில் அமைச் சர்கள் மற்றும் அவர்களுக்கான துறைகள் அடங்கிய பட்டியல் ஆளுநருக்கு நேற்று அனுப்பப்பட்டது. அந்த பட்டியலுக்கு ஆளு நர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், துரை முருகன், ஐ.பெரியசாமி, கே.என் நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, சாத்தூர் ராமச் சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட 33 பேர் இடம் பெற்றிருந்தனர். ஏற்கெனவே அமைச்சர் பதவிகளை வகித்த 19 பேரும், புதியவர்கள் 15 பேரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். புதியவர்களில் அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன் பில் மகேஷ் பெய்யாமொழி, மனோ தங்க ராஜ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அமைச்சராவார் என பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட உதயநிதி பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை.

கரோனா பரவல் காரணமாக பதவி யேற்பு விழாவுக்கு சுமார் 250 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகி களும், தொண்டர்களும் தங்கள் வீட்டிலி ருந்தே தொலைக்காட்சியில் பதவியேற்பு நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொறுப்பேற்பு

பதவியேற்பு விழா முடிந்ததும், முதல் வரும் அமைச்சர்களும் மெரினா கடற் கரைக்கு சென்று அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்து கின்றனர். அங்கிருந்து தலைமைச் செய லகம் செல்லும் ஸ்டாலினை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் வரவேற்கிறார். அதன்பின் தனது அறையில், மு.க.ஸ்டா லின் முதல்வர் பொறுப்பை ஏற்கிறார். திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக் கப்பட்ட திட்டங்களில் முதல்கட்டமாக 2 திட் டங்களை தொடங்குவதற்கான கோப்பு களில் ஸ்டாலின் கையெழுத்திடுகிறார். குறிப்பாக, ஜூன் 3-ம் தேதி முதல் வழங் கப்படும் என அறிவிக்கப்பட்ட ரூ.4 ஆயிரம் கரோனா நிவாரணம், குடும்பத் தலைவி களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி ஆகிய திட்டங்களை தொடங்கி வைப்பார் என தெரிகிறது. முதல்வர் பொறுப்பேற்றதும், 33 அமைச்சர்களும் அவர்களுக்கு ஒதுக்கப் பட்ட அறைகளில் பொறுப்பேற்கின்றனர்.

முதல் அமைச்சரவை கூட்டம்

தலைமைச் செயலகத்தில் முதல்வர் பொறுப்பை ஏற்றபின், மு.க.ஸ்டாலினை அரசுத் துறை உயரதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சந்திக்கின்றனர். மாலை 4 மணிக்கு, மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.

தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது, ஆக்சிஜன் தேவை, படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரித்தல், நிதி வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், ரூ.4 ஆயிரம் கரோனா நிவாரணம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி உள்ளிட்ட திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு கரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இதில் மூத்த அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x