Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

‘அடுத்த ஆண்டுக்கு 2.15 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு' :

உடுமலை

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-ம் ஆண்டில் 2,15,000 டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டுக்கான கரும்பு அரவை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மே, ஜுன் மாதங்களில் அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர்திறக்கப்படும் வாய்ப்பு உள்ளதால், சர்க்கரை ஆலை நிர்வாகம் அடுத்த ஆண்டுக்கான கரும்பு அரவை செய்ய தேவையான இலக்கை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆலை நிர்வாகம் தரப்பில், "2022-ம் ஆண்டில் 2,15,000 டன் கரும்பு அரவை செய்ய இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1500 ஏக்கரில் நடவுக்கான கரும்பு கட்டை உற்பத்தி செய்யவும், 4,500 ஏக்கர் பரப்பில் கரும்பு நடவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x