Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

கோவை-கண்ணூர் தினசரி சிறப்பு ரயில் 10 நாட்கள் ரத்து :

கோவை: பயணிகள் எண்ணிக்கை குறைவு காரணமாக கோவை- கண்ணூர் இடையேயான தினசரி சிறப்பு ரயில் நாளை முதல் வரும் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கண்ணூர்-கோவை இடையேயான தினசரி சிறப்பு ரயில் (எண்:06607), கோவை-கண்ணூர் இடையேயான தினசரி சிறப்பு ரயில் (எண்:06608) ஆகியவை வரும் 6-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, யஷ்வந்த்பூர்-கண்ணூர் இடையேயான தினசரி சிறப்பு ரயில், கண்ணூர்-யஷ்வந்த்பூர் இடையேயான சிறப்பு ரயில் ஆகியவை மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x