Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

நாமக்கல்லில் 6 தொகுதியிலும் தபால் வாக்குகளை அள்ளிய திமுக :

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதியிலும் பதிவான தபால் வாக்குகளில் திமுக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 6 தொகுதியிலும் திமுகவுக்கே அதிக தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. ராசிபுரம் (தனி) தொகுதியில் அதிமுகவுக்கு 924 தபால் வாக்குகளும், திமுகவுக்கு 2,115 வாக்குகளும் பதிவாகின.

இதுபோல் நாமக்கல்லில் அதிமுக - 1,590, திமுக - 3,014, சேந்தமங்கலம் (பகு) அதிமுக 485, திமுக 1,535, பரமத்திவேலூர் அதிமுக 1,441, திமுக 2,310, திருச்செங்கோடு திமுக 1,754, அதிமுக 818, குமாரபாளையம் அதிமுக - 595, திமுக 633 வாக்குகள் பெற்றன. இதன்படி 6 தொகுதியிலும் தபால் வாக்கில் அதிமுகவைக் காட்டிலும் திமுக அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தது. பதிவான மொத்த தபால் வாக்குகளில் 1,269 செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x