Published : 04 May 2021 03:13 am

Updated : 04 May 2021 03:13 am

 

Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

புதுச்சேரி சட்டப்பேரவையில் - பிரதான எதிர்கட்சியாகிறது திமுக :

புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவையில் பிரதான எதிர்கட்சியாக திமுக அமரும் நிலை ஏற்பட்டுள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 13 இடங்களில் திமுக போட்டியிட்டது. கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் புதுமுகங்கள் போட்டியிட்டனர். இதில் உப்பளம், முதலியார்பேட்டை, வில்லியனூர், பாகூர், காரைக்கால் தெற்கு, நிரவி திருப்பட்டினம் ஆகிய 6 தொகுதிகளை திமுக கைப்பற்றியது.


இதில் புதுச்சேரி மாநில தெற்கு அமைப்பாளர் சிவா, காரைக்கால் அமைப்பாளர் நாஜிம் வெற்றிப் பெற்றுள்ளனர். ஏற்கெனவே முதல்வராக ஜானகிராமன் இருந்த போது அதிக இடங்களை திமுக கைப்பற்றியிருந்த நிலையில் அதன்பிறகு அடுத்தடுத்த தேர்தல்களில் திமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

குறிப்பாக கடந்த பொதுத் தேர்தலில் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். ஆனால் இத்தேர்தலில் 6 தொகுதிகளில் திமுக வெற்றிப் பெற்றுள்ளது. புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும் தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளதால் அக்கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைகிறது. இதனால் புதுச்சேரி சட்டப்பேரவையில் பிரதான எதிர்கட்சியாக திமுக மீண்டும் செயல்படும் நிலை உருவாகி உள்ளது.

புதுச்சேரியின் எதிர்கட்சி தலைவராக யார் செயல்படுவார், கட்சியின் கொறடா ஆகியோரை திமுக தலைமை முடிவெடுத்து விரைவில் அறிவிக்கும். இதனால் அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x