Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க - விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் : சித்த மருத்துவ சிகிச்சை மையம் :

வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையிலான சிகிச்சை மையம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. இதனால், தனியார் கல்லூரிகளில் கோவிட் நல மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விஐடி பல்கலைக் கழகத்தில் உள்ள கோவிட் நல மையத்துக்கு நேரடியாக அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு ஆக்ஸிஜன் மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை முடிந்த பிறகு மேல் சிகிச்சை தேவைப் பட்டால் உடனடியாக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்படு வார்கள்.

அதேபோல், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களை நேரடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உள்ளனர். அங்கு மருத்துவப் பரிசோத னைக்குப் பிறகு அவசியம் இல்லா விட்டால் உடனடியாக வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்படு வார்கள்.

சித்த மருத்துவ சிகிச்சை

இதில், வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக் கப்பட்டுள்ள கோவிட் சிகிச்சை மையத்தில் கரோனா நோயாளி களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை களுடன் சித்த மருத்துவ வாழ்வி யல் நெறிமுறைகளை கடைபிடிப் பது குறித்தும் சித்த மருத்துவ மூலிகைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.

இந்த மையத்தை வேலூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசி கண்ணம்மா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, சித்த மருத்துவ சிகிச்சை மையத்தின் ஒருங் கிணைப்பாளர் மருத்துவர் தில்லை வாணன், சித்த மருத்துவர்கள் வேல்விழி, வசீம், ரத்னா, சஞ்சய் காந்தி மற்றும் மருந்தாளுநர்கள் மகேஸ்வரன், அசோகன், முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த மையத்தில் சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகளுக்கு இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்வதற்கு, மண்பானையில் ஊறிய சீரக தண்ணீர், வெட்டிவேர் நீர், சோம்பு தண்ணீர், ஓமத்திநீர், மூலிகைத் தேநீர் ஆகியவை வழங்கப்படவுள்ளன.

மேலும், கரோனாவின் குணங் கள் குறைவதற்கு ஏற்கெனவே தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைககப்பட்ட கோவிட் நல மையத்தில் ஆய்வு செய்யப்பட்ட சித்த மருந்துகளுடன் யோகா பயிற்சி, தியானப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், நீராவி எந்திரத்தை கொண்டு ஆவி பிடிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், திருநீற்று பச்சிலை தைலம், யூக்கலிப்டஸ் தைலம் சேர்க்கப்பட்டு நோயாளிகளுக்கு ஆவி பிடிக்க அறிவுறுத்தவுள்ளனர். மஞ்சள் திரி புகை, வசம்பு காப்புக்கயிறு, மஞ்சள்தூள் உப்புக்கல்லை நீருடன் கலந்து வாய் கொப்பளித்தல், மூலிகை தூபம் ஆகிய இயற்கை முறையிலான சிகிச்சைகளும் அளிக்கப்பட உள்ளது. நோயாளி கள் உடற்பயிற்சி செய்ய எட்டு வடிவ நடை மேடையும் அமைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x