Published : 23 Apr 2021 03:14 AM
Last Updated : 23 Apr 2021 03:14 AM

சீதாராம் யெச்சூரியின் மகன் மறைவு - முதல்வர், ஓபிஎஸ், ஸ்டாலின், தலைவர்கள் இரங்கல் :

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆசிஷ்யெச்சூரி (35) கரோனா பாதிப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது:

முதல்வர் பழனிசாமி: மகனை இழந்து வாடும் யெச்சூரி மற்றும் குடும்பத்தினருக்கு தமிழக மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மகனை இழந்து வாடும்யெச்சூரி மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: ஆசிஷ் யெச்சூரியின் இழப்புஆழ்ந்த கவலையையும், மன வருத்தத்தையும் தருகிறது. கடினமான நேரத்தில் சீதாராம் யெச்சூரி, அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரி: யெச்சூரிக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மகனை இழந்து வாடும் அவருக்குஆழ்ந்த இரங்கல்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மகனை இழந்து வாடும் யெச்சூரிக்கு, சோகத்தை தாங்கும் வலிமையை இயற்கை வழங்கட்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: ஒரு குடும்ப உறுப்பினரின் மறைவை, ஆறுதல் மொழிகள் ஆற்றுப்படுத்திவிட முடியாது. இப்பெரும் துயரில் இருந்து யெச்சூரி குடும்பத்தினர் மீண்டுவரஇயற்கைத் தாயை வேண்டுகிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: ஆசிஷ் மறைவு யெச்சூரிக்கும், அவரது குடும்பத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. சிறந்த பத்திரிகையாளர் என்ற வகையில் அவரது மறைவு பத்திரிகை உலகுக்கும் பேரிழப்பாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: பெற்ற மகனை இழப்பதைவிட பேரிழப்பு பெற்றோருக்கு இருக்க முடியாது. யெச்சூரி குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்: தந்தை போலவே இடதுசாரி அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த ஆசிஷ் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: யெச்சூரி குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். பாமக இளைஞர் அணிதலைவர் அன்புமணி, காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x