Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

பொருளாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கடைசி ஆயுதம்தான் முழு ஊரடங்கு : மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

கரோனா போரில் பொருளாதாரம், மக் களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு ஊரடங்கு என்பது கடைசி ஆயுதம்தான் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி யுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59,170 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி யுள்ளனர். இதையடுத்து, பல மாநிலங் கள் இரவு நேர ஊரடங்கு, ஒரு வார ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. தமிழகத்திலும் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை களில் முழு ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி நேற் றிரவு நாட்டு மக்களிடையே உரையாற்றி னார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் கடைசி ஆயுதமாக ஊரடங்கு அமல் படுத்துவது ஒன்றுதான் ஒரே வழியாக இருக்கும்.

சுய கட்டுப்பாடு மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். நிலைமை கட்டுக்கடங்காமல் போகும் பட்சத்தில் மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தலாம். உயிரிழப்பை தடுப் பதுதான் நமது நோக்கம், அதேநேரத்தில் பொருளாதாரம், மக்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, உயிரிழப்பைக் கட்டுப் படுத்த வேண்டும்.

இப்போதைக்கு நாடு முழுவதுமான ஊரடங்கு என்பது பரிசீலனையில் இல்லை. ஆக்சிஜன் சீராக கிடைப்பதற் கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே வெளியில் வரவேண்டும். மாநிலங்கள் கடைசி ஆயுதமாகத்தான் முழு ஊரடங்கை பயன்படுத்த வேண்டும். அதற்கு முன்பாக கட்டுப்பாட்டு நடவடிக் கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

இதனிடையே, கரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் பேசியதாவது:

கரோனாவைத் தடுக்கும் பணியில் தடுப்பூசி நிறுவனங்களின் செயல்பாடு மிகவும் பாராட்டுக்குரியது. இதன் காரண மாகவே உலக அளவில் தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா முன்னிலை வகிக் கிறது. மே 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயது நிரம்பியவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தடுப்பூசி உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க வேண்டியது அவசியம்.

மிகக் குறுகிய காலத்தில் தடுப்பூசி மருந்து கண்டுபிடித்து, அதை குறைந்த விலையில் தயாரிக்கும் பணியில் இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி, பரிசோதனை, தயாரிப்பு என அனைத்து நிலைகளிலும் இந்தியா தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

அனைத்து மருந்து உற்பத்தி நிறுவனங் களுக்கும் தடுப்பூசி மருந்துகளை எடுத்துச் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து தரும். ஏற்கெனவே கண்டுபிடித்த தடுப்பூசி மருந்துகளோடு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு பரி சோதனை கட்டத்தில் உள்ள தடுப்பூசி மருந்துகளுக்கும் விரைவில் அனுமதி வழங்கப்படும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.

கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் தனியார் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இனிவரும் காலங்களி லும் இது தொடர வேண்டியது அவசிய மாகும். மருத்துவமனைகளுக்கும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையே மிக முக்கியமான ஒத்துழைப்பு இருக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அரசு எடுத்த முடிவை மருந்து தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகள் வரவேற்றனர். மருந்து தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் மத்திய அரசு அளித்த ஒத்துழைப்பை அவர்கள் வெகுவாக பாராட்டினர்.

இந்தியாவில் தற்போது சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் ‘கோவி ஷீல்டு’, பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்ஸின்’ ஆகிய 2 தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர ரஷ்ய நிறுவனம் தயாரித்த ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கான அனுமதியை டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் பெற்றுள்ளது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது. இதுதவிர பிற நாடுகளில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி மருந்துகளான பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளையும் விரைவில் அனுமதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

புதுச்சேரியில் 2 நாள் முழு ஊரடங்கு

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நேற்று இரவு ராஜ்நிவாஸில் உயர்நிலைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அனைத்து அரசுத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், புதுச்சேரி முழுவதும் 23-ம் தேதி முதல் புதிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை முழு ஊரடங்கு இருக்கும். மேலும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x