Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM

உணவகத்தில் எஸ்ஐ தாக்குதல் நடத்திய விவகாரம் - கோவை தெற்கு கோட்டாட்சியர் விசாரணை தொடக்கம் :

உணவகத்தில் வாடிக்கையாளர் களை காவல் உதவி ஆய்வாளர் தாக்கிய விவகாரம் தொடர்பாக கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில், சாஸ்திரி நகரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார்.

கடந்த 11-ம் தேதி இரவு இந்த உணவகத்துக்கு வந்த காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து, கடை ஏன் இன்னும் மூடாமல் திறந்து வைக்கப்பட்டுள்ளது எனக் கேட்டு, அங்கிருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்களை லத்தியால் சரமாரியாக தாக்கினார்.

இதில் ஓசூரைச் சேர்ந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர்,கடை ஊழியர்கள் என 4 பேர் காயமடைந்தனர். உதவி ஆய்வாளர் தாக்கிய நிகழ்வு தொடர்பான சிசிடிவி காட்சி பதிவு வைரலாக பரவியது. உதவி ஆய்வாளர் முத்துவின் செயல்பாடுகளுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரி வித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காட்டூர் காவல் நிலையத்தில் இருந்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட உதவி ஆய்வாளர் முத்து பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க, மத்திய உட்கோட்ட சட்டம் ஒழுங்கு உதவி ஆணையருக்கு, மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். உதவி ஆணையரும் இது தொடர்பாக விசாரணை நடத்திஅறிக்கை அளித்தார். அதன் அடிப்படையில், உதவி ஆய்வாளர் முத்து தாக்கிய விவகாரம் தொடர்பாக, கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் விசாரணையைத் தொடங்கி யுள்ளார்.

விசாரணையின் இறுதியில் உதவி ஆய்வாளர் முத்து, உணவ கத்தில் தாக்குதல் நடத்தியது நிரூபிக்கப்பட்டால், அவர் மீது வழக்கு பதிந்து, சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x