Published : 18 Apr 2021 03:19 AM
Last Updated : 18 Apr 2021 03:19 AM

மண்டேலா திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரிமருத்துவர் சமூக நலச் சங்கத்தினர் மனு :

மண்டேலா திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளியை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, தமிழ்நாடு மருத்துவர் சமூகநலச் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தின், ராமநாதபுரம் மாவட்ட மற்றும் நகர் நிர்வாகிகள் சார்பில் சார் ஆட்சியர் சுகபுத்ராவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் முத்துமாரி, நகர் தலைவர் பால்ராஜ் ஆகியோர் தலைமையில், மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், நகர் செயலாளர் பாலமுருகன், மாவட்டப் பொருளாளர் சேகர், பொருளாளர் கண்ணதாசன் முன்னிலையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

அந்த மனுவில் மண்டேலா படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மனம் புண்படும்படியாக எடுக்கப்பட்ட காட்சிகளை ரத்துசெய்ய வேண்டும், மேலும் இப்படத்தின் கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் படத்தை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x