Published : 17 Apr 2021 03:16 AM
Last Updated : 17 Apr 2021 03:16 AM

நாங்குநேரியில் சித்திரை திருவிழா தொடக்கம் : சங்கரன்கோவிலில் இன்று கொடியேற்றம்

நாங்குநேரி வானமாமலைப் பெரு மாள் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங் கியது.

இக்கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 27-ம் தேதி தேரோட்டத்துடன் நிறைவுபெற்றது. இதன் தொடர்ச்சியாக சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. நேற்று காலையில் விஸ்வரூபம், எண்ணெய்க்காப்பு, திருமஞ்சனம், அலங்காரமாகி, வரமங்கைத் தாயார் சமேத தெய்வநாயகப் பெருமாள், பலி மண்டபத்துக்கு எழுந்தருளினார். பின்னர், வானமாமலை மடம் மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தலைமையில் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

திருவிழா நாட்களில் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருள்கிறார். வரும் 20-ம் தேதி கருட சேவை உற்சவமும், 25-ம் தேதி சித்திரை தேரோட்டமும் நடைபெறுகின்றன. 26-ம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. திருவிழா நிகழ்ச்சிகள் அரசின் கரோனா நெறிமுறைகள் படி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில்

சங்கரநாராயண சுவாமி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்ற த்துடன் இன்று (17-ம் தேதி) தொடங்குகிறது. இன்று காலை 7.45 மணியில் இருந்து 8.15 மணிக்குள் சங்கரலிங்க சுவாமி சந்நிதி முன் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. உள் பிரகாரத்தில் சுவாமி, அம்பாள் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

கொடியேற்றத்துக்கு முந்தைய நாள் பெருங்கோட்டூர் கிராமத்தில் கோயில் யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக பெருங்கோட்டூர் கிராமத்துக்கு பதிலாக, நடராஜர் சந்நிதி அருகில் யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x