Published : 16 Apr 2021 03:11 AM
Last Updated : 16 Apr 2021 03:11 AM

கரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி - டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு :

டெல்லியில் கடந்த புதன் கிழமை மட்டும் 17,282 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஒரே நாளில் 104 பேர் இறந்துள்ளனர். நிலைமை மோசமாகி வருவதால் கரோனாவை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் டெல்லியில் ஊர டங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் கேஜ்ரிவால் கூறியதாவது:

டெல்லி மருத்துவமனைகளில் 5,000-க்கும் அதிகமான படுக்கை கள் தயாராக உள்ளன. அழகு நிலையங்கள், மால்கள், உடற் பயிற்சி கூடங்கள், கூட்ட அரங்குகள் மூடப்படும். திரையரங்குகளில் 30 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. பார்சல் மட்டுமே அனுமதிக்கப் படும். ஒரு நகராட்சி மண்டலத்தில் ஒரு நாளில் ஒரு மார்க்கெட் மட்டுமே செயல்படும். ஊரடங்கின் போது திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்வோருக்கு இ-பாஸ் வழங்கப்படும். அத்தி யாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும். பொது இடங்களில் கரோனா விதிகள் கடுமையாக பின்பற்றப்படும்.

இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x