Published : 15 Apr 2021 03:09 AM
Last Updated : 15 Apr 2021 03:09 AM

மறைமுக வரி வசூல் : 12 சதவீதம் உயர்வு :

புதுடெல்லி

கடந்த நிதி ஆண்டில் (2020-21)மறைமுக வரி வசூல் 12 சதவீதம் அதிகரித்து ரூ. 10.71 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.

மறைமுக வரி வருமானத்தில் முக்கிய பங்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பாகும். இது 12% அதிகரித்து ரூ.10.71லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. திருத்தப்பட்ட மதிப்பைக் காட்டிலும் இது 8 சதவீதம் அதிகமாகும். நேரடி வரி வருமானம் ரூ.9.45 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மறைமுக வரி வருமானத்தில் முக்கியபங்கு வகிப்பது சுங்க வரியாகும். இது 21% அதிகரித்து ரூ.1.32 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. உற்பத்தி வரி மற்றும் சேவை வரி வருமானம் ரூ.3.91 லட்சம் கோடியாகும். இது 59% அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x