Published : 10 Apr 2021 03:12 AM
Last Updated : 10 Apr 2021 03:12 AM

மேஷம்: கொஞ்சம் அலைச்சல் இருக்கும்

மேஷம்: கொஞ்சம் அலைச்சல் இருக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சில காரியங்கள் இழுபறிக்குப் பின்னரே முடியும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.ரிஷபம்: வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். உடன் பிறந்தோருடன் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்.மிதுனம்: மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனைப்படி சொத்து பிரச்சினை களுக்கு தீர்வு காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.கடகம்: இழுபறியாக இருந்த சில காரியங்கள் முழுமையடையும். விஐபிகளின் ஆதரவு கிட்டும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். கலைப்பொருட்கள் சேரும்.சிம்மம்: வீண் அலைச்சல், பணத்தட்டுப்பாடு வரக் கூடும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். எதிர்பாராத மருத்துவச் செலவுகள், வீண்பழிகள் வந்து நீங்கும்.கன்னி: பால்ய நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. பிள்ளைகளுக்கு நவீன ஆடை, ஆபரணங்களை வாங்கித் தருவீர்கள்.துலாம்: பிரபலங்களின் நட்பு கிட்டும். சகோதர, சகோதரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணத்துக்கு திட்டமிடுவீர்கள்.விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த வகையில் உதவிகள் கிடைக்கும். மனதில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். விஐபிக்கு நெருக்கமாவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.தனுசு: அரசு காரியங்களில் அனுகூலம் உண்டு. விலகியிருந்த உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். அக்கம்பக்கத்தினருடன் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.மகரம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மூத்த சகோதரர் வகையில் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். திடீர் பயணம் உண்டு.கும்பம்: முயற்சிகள் யாவும் வெற்றியடையும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த தொகை கைக்கு வரும்.மீனம்: எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லுங்கள். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேச வேண்டாம். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x