Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

புனித ரமலான் மாதத்தில் - பள்ளிவாசல்கள் இரவு 10 வரை திறந்திருக்க அனுமதி வேண்டும் : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த ஏப்.10-ம் தேதி (நாளை) முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே மக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித ரமலான் மாதம் வரும் 14-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்த கட்டுப்பாட்டினால் ரமலான் இரவு தொழுகையை முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் நிறைவேற்ற முடியாத சூழல் உருவாகும். எனவே, சிறுபான்மை முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்கள் இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x