Published : 08 Apr 2021 03:13 am

Updated : 08 Apr 2021 03:13 am

 

Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

புதுச்சேரி, காரைக்காலில் தேர்தல் விதிமீறல் - ரூ.61 லட்சம் மதிப்பிலான 35 ஆயிரம் லிட்டர் மது பறிமுதல் :

புதுச்சேரி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் வாக்குப்பதிவு நாள் வரை 1,869 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட மது குறித்து விபரங்களை கலால்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி புதுவை மாநிலத்தில் 4 ஆயிரத்து 381 லிட்டர் பிராந்தி வகைகள், 2 ஆயிரத்து 456 லிட்டர் பீர், 28 ஆயிரத்து 716 லிட்டர் சாராயம் என மொத்தம் 35 ஆயிரத்து 554 லிட்டர் மது வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.61 லட்சத்து 52 ஆயிரத்து 78 ஆகும்.


விதிமீறல், மது கடத்தல் தொடர்பாக 219 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 227 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விதிமீறல் தொடர்பாக ரூ.12 லட்சத்து 77 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 6 சுற்றுலா உரிமம் பெற்ற பார்கள், ஒரு சாராயக்கடை, ஒரு சில்லரை மது விற்பனை கடை என மொத்தம் 8 மதுபான உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x