Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் சூழலில் - ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை பெற நாளை முதல் முன்பதிவு கட்டாயம் :

கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் சூழலில், புதுச்சேரி ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை பெற நாளை முதல் முன்பதிவு கட்டாயம் என ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:

கரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் வேளையில், மருத்துவமனை வளாகங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது தவிர்க்க இயலாததாகும். கரோனா தொற்று மருத்துவமனை மூலம் பரவுவதைத் தவிர்க்க, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளை முதல் அனைத்து மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் முன்பதிவு செய்து தொலை மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே வெளிப்புற சிகிச்சை சேவைகள் வழங்கப்படும்.

வெளிப்புற சிகிச்சை பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முன்பதிவு பெற வேண்டியது கட்டாயம். மருத்துவமனையில் அனைத்து அவசர சேவைகள், எப்போதும் போல எந்த முன்பதிவும் இன்றி தொடரும்.

இதற்கான தொலைபேசி எண்கள் பற்றிய விவரங்களை 'www.jipmer.edu.in' என்ற ஜிப்மர் இணையதளத்தில் பெறலாம். பொதுமக்கள் 'ஹலோ ஜிப்மர்' எனப்படும் ஆண்ட்ராய்டு செயலியின் உதவியுடனும் வெளிப்புற சிகிச்சை சேவைகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்த நோயாளிகளுக்கு அவர்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணில் மருத்துவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேவைப்படுவர்களுக்கு மட்டும் மருத்துவமனைக்கு வருவதற்கான குறுஞ்செய்தி அனுப்பி வைப்பார்.

கதிர்காமம் அரசு மருத்துவக்

கல்லூரி சிகிச்சை பிரிவுகள் மூடல்

புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பிரிவு தவிர இதர பிரிவுகள் நேற்று முதல் மூடப்பட்டன. கரோனா அதிகரிப்பால் கரோனா சிறப்பு பிரிவு மட்டுமே இங்கு 8-ம் தேதி (இன்று) முதல் செயல்படும். மறு உத்தரவு வரும் வரை இம்முறை நடைமுறையில் இருக்கும்.

சுகாதார நலப்பணியாளர்களுக்கும், இதர நோயாளிகளுக்கும் கரோனா பரவலை தடுக்கவே இம்முறை அமலாவதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே கரோனா சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இனி முழுவதும் கரோனா சிகிச்சைக்காக இயங்க உள்ளது. நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு துறையிலும் 100 நோயாளிகள் மட்டும் மருத்துவமனைக்கு நேரில் வந்து மருத்துவ ஆலோசனை பெற அனுமதிக்கப்படுவர்.

மருத்துவ மனைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். அனைவருக்கும் முன் அனுமதிக்கான கைப்பேசி குறுஞ்செய்தியை உறுதி செய்த பின்னரே மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரு நோயாளியுடன் ஒரு நபர் மட்டுமே மருத்துவமனைக்குள் செல்லலாம். மருத்துவமனை மூலம் கரோனா தொற்று பரவுவதை தவிர்க்க ஜிப்மர் மருத்து வமனையின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு ஜிப்மர் இயக்குநர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு துறையிலும் 100 நோயாளிகள் மட்டும் மருத்துவமனைக்கு நேரில் வந்து மருத்துவ ஆலோசனை பெற அனுமதிக்கப்படுவர். அனைவருக்கும் முன் அனுமதிக்கான கைப்பேசி குறுஞ்செய்தியை உறுதி செய்த பின்னரே மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x